×

சீர்காழி அருகே சாலையின் நடுவே மெகா பள்ளம்-வாகன ஓட்டிகள் அவதி

சீர்காழி : சீர்காழி அருகே சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றன.சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி இருப்பதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதை அந்த வழியாக செல்லும் அதிகாரிகள் பார்த்தும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சீர்காழி அருகே சாலையின் நடுவே மெகா பள்ளம்-வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mega crater ,Ciradastra ,Cigara ,Avadi ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு