×

பூமியில் சண்டை..விண்வெளியில் நட்பு..!: ரஷ்ய விண்கலம் மூலம் பூமி வந்தடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்..355 நாட்கள் தங்கியிருந்து சாதனை..!!

கஜகஸ்தான்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றி சாதனை படைத்த நாசா விஞ்ஞானி பூமிக்கு திரும்பினார். நாசா விண்வெளி வீரர் மார்க் வாண்டஹே கடந்த 2021 ஏப்ரல் 9ம் தேதி சர்வதேச விமான நிலைய விண்வெளி நியதில் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்த அவர், கஜகஸ்தானில் ரஷ்ய விண்வெளி கேப்ஸுல் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. மார்க் வாண்டஹே பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் அவருடன் 2 ரஷ்ய விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பினர். உக்ரைன் போரால் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான விரோதம் இருந்த போதிலும் இருநாட்டு வீரர்களும் ஒற்றுமையுடன் பூமி திரும்பியுள்ளனர். பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ளவுள்ளனர். …

The post பூமியில் சண்டை..விண்வெளியில் நட்பு..!: ரஷ்ய விண்கலம் மூலம் பூமி வந்தடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்..355 நாட்கள் தங்கியிருந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : earth ,Kazakhstan ,NASA ,International Space Research ,Center ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா