×

மாமூல் தர மறுத்ததால் கோபம்: கழிவுநீர் லாரியை மோதவிட்டு திருமண மண்டப சுவர் இடிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சொந்தமாக கழிவுநீர் லாரியை ஓட்டி வருகிறார். இவரிடம் திருவள்ளூர் பெரியகுப்பம், மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பத்குமார் மாமூல் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த ஆகாஷ் திடீரென கழிவுநீர் லாரியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது மோதிவிட்டார். இதில் அந்த சுவர்நொறுங்கி விழுந்ததில் கழிவுநீர் லாரி மண்டபத்துக்குள் புகுந்து  நின்றது.  அப்போது திருமண நிகழ்ச்சி எதுவும் நடைபெறாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து லாரியை விட்டுவிட்டு ஆகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகர போலீசார் வந்து விசாரித்தனர். சம்பத்குமார் கொடுத்த புகாரின்பேரில் எஸ்ஐ பத்ம பபி வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவள்ளூரில் பரபரப்பு நிலவியது….

The post மாமூல் தர மறுத்ததால் கோபம்: கழிவுநீர் லாரியை மோதவிட்டு திருமண மண்டப சுவர் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamool ,Thiruvallur ,Sambatkumar ,Periyakuppam ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி