×

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கியது.! அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித ேசவை டிக்கெட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 20ம்தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் முன்பதிவு இன்று காலை 11 மணி முதல் மீண்டும் தொடங்கியது. திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலக கவுன்டரில் தொடங்கிய முன்பதிவு, தினமும் மாலை 5 மணி வரை பதிவு நடைபெறும். இதில் பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு ஆதார் அட்டை வைத்து பதிவு செய்து நகல் வழங்கப்பட்டது. பதிவு செய்தவர்களுக்கு தானியங்கி ரேண்டம் முறையில் தேர்வானவர்களுக்கு மாலை 6 மணிக்கு டிக்கெட் வழங்கப்படும். ஏற்கனவே முன்பதிவு செய்து ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஆர்ஜித அலுவலகத்தில் இரவு 8 மணிக்குள் டிக்கெட் காண்பித்து உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வராத பக்தர்களின் டிக்கெட்கள் இரவு 8.30 மணிக்கு 2வது முறை குலுக்கல் செய்யப்பட்டு மற்ற பக்தருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு வந்த எஸ்எம்எஸ் மூலம் இரவு 11 மணிக்கு முன் சேவை டிக்கெட்டை பெற வேண்டும். ஒருமுறை இந்த குலுக்கல் முறையில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மாதத்திற்கு மீண்டும் பெற முடியாத வகையில் தானியங்கி ரிஜெக்ட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கட்டாயம். அல்லது என்ஆர் பக்தர்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயமாகும். ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்ய, ஒரிஜினல் புகைப்பட அடையாள அட்டையுடன் பக்தர்கள் வர வேண்டும்.புதிதாக திருமணமான தம்பதியருக்கு திருமண பத்திரிகை, ஒரிஜினல் புகைப்பட அடையாள சான்று ஆகியவற்றை சமர்ப்பித்தால், கல்யாண உற்சவ டிக்கெட் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்படும் கல்யாண உற்சவ டிக்கெட் அவர்களின் திருமண தேதியில் இருந்து 7 நாட்களுக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த டிக்கெட் பெற முடியும். இதேபோன்று 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக திருமலையில் உள்ள பிஏசி 1ல் உள்ள 2 கவுன்டர்களில் இன்று முதல் மொத்தம் 750 டோக்கன்கள் தினமும் வழங்கப்பட உள்ளது. உண்டியல் காணிக்கை ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 61,224 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியலில் ரூ.4.02 கோடியை காணிக்கையாக செலுத்தினர்….

The post திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கியது.! அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Arjitha Seva ,Tirumala ,Tirupati Seven Malayan Temple ,Angapradhaksan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை