×

கத்ரீனா கைப் கர்ப்பமா?

பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் ஜோடியுடன் கலந்துகொண்ட நிலையில், கத்ரீனா கைப்பின் கணவர் நடிகர் விக்கி கவுஷல் தனியாகப் பங்கேற்றார். இதனால் அந்த தகவல் பரவியது.

இதுகுறித்து கத்ரீனா கைப் கூறுகையில், ‘நான் கர்ப்பமாக இல்லை. படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். ‘ஏக்தா டைகர்’ படத்தின் 3வது பாகத்தில் நடிக்கிறேன். விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பிலும் கலந்துகொள்கிறேன்’ என்றார்.

The post கத்ரீனா கைப் கர்ப்பமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Katrina Kai ,Bollywood ,Katrina Kaif ,Vinayagar Chaturthi function ,Mukesh Ambani ,Mumbai ,Vicky Kaushal… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...