×

கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது..பிரதமர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்வதாக தகவல்!!

இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ‘இம்ரான் கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவரது கட்சியினர் உட்பட பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு 161 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத்  நிருபர்களிடம் தெரிவித்தார். மொத்தம் 342 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து என்ற நிலையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான் கான் எதிர்கொண்டிருந்தார் .இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியுடன் கைகோத்து இம்ரானுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆட்சியில் நீடிக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் கூட்டணி கட்சி விலகியதை அடுத்து இம்ரானுக்கான ஆதரவு 164 ஆகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பலன் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெருமான்மையை இழந்துள்ள இம்ரான்கான் அரசு ஆட்சியை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது….

The post கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது..பிரதமர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்வதாக தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Pakistan ,Islamabad ,Muttahida Qaumi Movement ,Pakistan Tehreek ,e-Insaf Party ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு