- விமல்
- விஜய்
- சூரி
- ஜான் பீட்டர்
- ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்
- ஸ்ரீதா
- KGF
- ரேம்
- தேவதர்ஷினி
- நமோ நாராயணன்
- வினோதினி வைத்தியநாதன்
- டி.எஸ்.ஆர்
- சரவணா சாக்தி
- சாம்ஸ்
- கே.வி.நந்தா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
விமல், சூரி இணைந்து நடிக்கும் ‘படவா’ என்ற படத்தை ஜே ஸ்டுடியோஸ் இண்டர்நேஷனல் சார்பில் இசை அமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரித்துள்ளார். ஸ்ரீதா, ‘கேஜிஎஃப்’ ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி வைத்தியநாதன், டி.எஸ்.ஆர், சரவண சக்தி, சாம்ஸ் நடித்துள்ளனர். கே.வி.நந்தா இயக்கியுள்ளார். ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா பாடல்கள் எழுதியுள்ளனர். படம் குறித்து ஜான் பீட்டர் கூறுகையில், ‘சூரி மிகப்பெரிய கேரக்டரில் வித்தியாசமான பாணியில் நடித்துள்ளார்’ என்றார்.
இளையகம்பன் கூறும்போது, ‘ஜான் பீட்டர் தயாரித்துள்ள ‘படவா’ படம் பெரிய வெற்றிபெறும். இதில் 6 பாடல்களில், முகப்புப் பாடலை நான் எழுதியுள்ளேன்’ என்றார். ஸ்ரீதா கூறுகையில், ‘எனக்கு தமிழ் தெரியாது. இயக்குனர் உதவியதால் தமிழில் வசனம் பேசி நடித்தேன்’ என்றார். விஜய் ஆண்டனி கூறும்போது, ‘இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரான இசை அமைப்பாளர் ஜான் பீட்டருக்கு வாழ்த்துகள். விமல், சூரி ஆகியோரின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்’ என்றார்.
The post விஜய்யை கவர்ந்த விமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.