×

‘காலா‘ மூலம் இந்தியில் கால் பதிக்கும் நிவேதா பெதுராஜ்

ஓடிடி தளத்தில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது ‘காலா‘ வெப் சிரீஸ். ஹாட் ஸ்டார் வெளியீடாக வெளியாகியிருக்ககும் இந்த வெப்சீரிஸை பிரபல இந்திய இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்க, அதில் அவினாஷ் திவாரி, மற்றும் நிவேதா பெதுராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெப்சீரீஸ் மூலம் இந்தியில் கால் பதித்திருக்கும் நடிகை நிவேதா பெதுராஜ் இது குறித்து பேசுகையில்; முழுக்க முழுக்க ஹவாலா மோசடி பணம் இதை சுற்றி நகர்கிற கதை. நான் ஒரு ஐபி ஆபிஸராக நடித்திருக்கிறேன். என்னுடைய பெயர் சித்தாரா . என்னுடன் அவினாஷ் திவாரி நடித்திருக்கிறார். மும்பையிலே ஒரு விளம்பர சூட்டிங் காரணமாக போயிருந்தேன். அப்போ இந்த வெப் சீரிஸ்க்கான அழைப்பு வந்தது.

என்னுடைய ட்ரீம் டைரக்டர்களை பட்டியலிட்டால் நிச்சயம் பிஜோய் நம்பியார் அதில் முக்கியத்துவமான இடம் பிடிப்பார், அவருடைய மேக்கிங் ஸ்டைல் ரசித்து பார்த்து இருக்கேன். ‘சோலோ‘ மாதிரியான படங்கள் பார்க்கும்பொழுது ‘இவர் வித்தியாசமா கதைக்களம் அமைக்கிறாரே, இந்த மாதிரி ஒரு படத்துல நான் இருந்திருக்கலாமே‘ எனத் தோன்றியது. மேலும் நேரிலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்யும் பொழுது இன்னமும் நிறைய விஷயங்கள் கத்துக்க முடிந்தது .எத்தனை டேக் ஆனாலும் சரி அவருக்கு என்ன தேவையோ அதை வாங்குகிற வரை விட மாட்டார்.

அவிநாஸ் திவாரி நல்ல கோ- ஸ்டார் வளர்ந்து வருகிற ஒரு பாலிவுட் நடிகர். அவர் கூட சேர்ந்து நடித்ததிலும் எனக்கு சந்தோஷமாக இருக்கு . இந்த வெப் சீரிஸ் ஆரம்பிப்பதற்கு முன்பு அவ்வளவு தயக்கங்கள் இருந்தது. காரணம் இந்தியில் எதுவுமே தெரியாது. எப்படி நடிப்பது என நிறைய பயம் ,தயக்கம் ஆனால் பிஜோய் எனக்கு நிறைய தைரியம் கொடுத்து நடிக்க சொன்னார். ஆனால் அங்கே போனால் அத்தனையும் இந்தி கடைசியில் எனக்காக முக்கால்வாசி ஆங்கிலத்தில் பேசுகிற மாதிரி மொத்தப் படக் குழுவையும் பார்த்துகிட்டார்.
படத்தின் நாயகன் அவினாஷ் மிஸ்ரா பேசுகையில்;

‘காலா‘ இந்தப் பெயருக்கே தமிழ் நாட்டில் ஒரு பெரிய வரலாறு உண்டு என்பது எனக்குத் தெரியும். ராஜினி ஜியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம். அந்தப் பெயர் எங்கள் வெப் சீரிஸிற்குக் கிடைத்ததே எங்களுடைய லக். எப்படி இந்த வெப் சீரிஸ் மூலம் நிவேதா பாலிவுட்டில் அறிமுகமோ நானும் தமிழுக்கு அறிமுகம். இயக்குநர் பிஜோய் நம்பியாருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நால் கனவு, இதில் நிறைவேறியிருக்கிறது. நிவேதா… எனக்குத் தெரிந்து இந்தியாவில் போலீஸ் அதிகாரி, லேடி ஆபிசர் என்றாலே நிவேதாதான் சமீப காலமாக ஞாபகத்திற்கு வருவார் எனலாம்.

அவரின் தோற்றம், உடல் வாகும் அதற்கு ஒரு காரணம். புத்திசாலியான நடிகை அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கும் சந்தோஷம். காலா ஏற்கனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள்தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

The post ‘காலா‘ மூலம் இந்தியில் கால் பதிக்கும் நிவேதா பெதுராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nivetha Pethuraj ,Hot Star ,Bijoy Nambiar ,Avinash Tiwari ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்