×

செல்லத்தை செல்லா காசாக மாற்ற செல்லூரார் எடுத்து இருக்கும் சபதம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரையை எதிர்க்க தயாராகிவிட்ட புல்லட்சாமியின் திட்டம் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரி  தாமரை எம்எல்ஏக்கள் தங்களை  புல்லட்சாமி மதிப்பதில்லையென அமைப்பு செயலாளர்  மகிழ்ச்சியானவரிட்ம்  பொறிந்து தள்ளியுள்ளனர். நாம் நினைத்தால் இந்த ஆட்சியே  இருக்காது, கூட்டணி அரசு என்பதை முழுக்க தாமரை ஆட்சியாகவே மாற்றிவிட  முடியும். 12 எம்எல்ஏக்கள் என்ற மெஜாரிட்டி இருக்கிறது. அதோடு 3  சுயேட்சைகள், அதிருப்தி புல்லட்சாமி கட்சி எம்எல்ஏக்கள் என நம் பக்கம் வர  தயாராக இருக்கிறார்கள். இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் புல்லட்சாமி  இருக்கிறார். எனவே அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.  தேவைப்பட்டால் அவரை மாற்றிவிட்டு புதிய முதல்வரை நியமிக்க வேண்டுமென ஆவேசம் காட்டினார்களாம். பொறுத்திருங்கள், நேரம் காலம் கூடி வரும்போது  பார்க்கலாம் எனக்கூறிவிட்டு டெல்லிக்கு போய்விட்டார். மேலிடப்பொறுப்பாளரிடம், உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று நம் பலத்தை காண்பிக்க  வேண்டும். கூட்டணி தேவையில்லை, வார்டு, கிராமம் அளவில் வலுவான கட்சியாக  தாமரை இருக்கிறது. ஆனால், புல்லட்சாமி கட்சிக்கு உறுப்பினர்கள் கூட   இல்லையென சொன்னார்களாம். தாமரையின் அதிருப்தி குறித்து  புல்லட்சாமி தரப்பில் கேட்டபோது, சட்டமன்ற தேர்தலில் கூட புல்லட்சாமியை  மிரட்டித்தான் கூட்டணிக்கு அச்சாரம் போட்டனர். டெல்லிவரை வரை சென்று புல்லட்சாமியை தொடர்பு கொண்டு பணிய வைத்தனர். இதெல்லாம் மக்களுக்கு நன்றாக  தெரியும். அதோடு விட்டார்களா.. சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள், எம்பி பதவி  என எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டனர். இனிமேல் என்ன இருக்கிறது.  புல்லட்சாமி கவிழ்க்க முயற்சித்தால் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு ஆட்சியை கலைத்து, நமது ஆட்சியை கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம். இது தெரிந்த புல்லட்சாமி, கட்சியை வலுப்படுத்த, தொண்டர்களை தக்க வைக்க, நிர்வாகிகளின் கோபத்தை தணிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட உள்ளாராம். இதன் மூலம் கட்சியினரை திருப்தி படுத்தலாம்… தாமரைக்கும் செக் வைக்கலாம் என்பதுதான் தற்போதைய பிளானாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகரத்துல இலை கட்சியில 2 பெண்களை வைத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்காநகர மாநகராட்சியில் இலைக்கு 15 கவுன்சிலர்கள் இருக்காங்க. இதனால பலமான எதிர்கட்சியாக இலை தரப்பு உள்ளதாம். கடந்த முறை தலைவர் பதவிக்கு நடந்த சண்டை இந்த முறை துணை தலைவர் என்பதாக மாறிவிட்டது. இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறதாம். கடந்த 2011 முதல் 2021 வரை மதுரை மாநகராட்சியை தன் இஷ்டப்படி ஆட்டிப்படைத்தவர் செல்லமானவர். அவர் மேயராக இருந்த வரைக்கும் இங்கிருந்த செல்லூர்காரரால் ஒன்றும் செய்ய முடியலையாம். இதனால், ‘நமக்கு மாநகராட்சியில் சரியான மரியாதை இல்லை, நாம் நினைத்த திட்டத்தை செயல்படுத்த முடியல. கட்சி தோற்று இருந்தாலும் அரசியலில் நான் ஜெயிக்க வேண்டும்.. நம்ம பவர் என்ன என்று காட்ட வேண்டும்.. செல்லமானவரை செல்லாத காசாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறராம். அதற்காக தலையாட்டி பொம்மையாக செயல்படும் பெண்ணை துணை தலைவராக கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.  இதனால், அவரின் தீவிர ஆதரவாளரான சோலை கிங் என்பவரை, இப்பதவிக்கு, கட்சி மேலிடத்திற்கு சிபாரிசு செய்துள்ளாராம். ஆனால், அதை தடுத்து தனக்கு வேண்டியவரை துணை தலைவராக்கி மாநகராட்சியில் தன் பவரையும், மாநகரத்தில் தன் செல்வாக்கையும் தக்க வைக்க முயற்சி செய்கிறாராம். இதற்காக ேதனி, சேலம் என்று போன் மேல் போன் போட்டு கட்சி தலைமையை அலறடிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தல்ல ஒட்டுமொத்தமாக அள்ளிட்டீங்க… ஒன்றையாவது விட்டுக் கொடுங்கப்பானு யாரு, யாரிடம் கெஞ்சுறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள் உள்ளன. இதில், 32 பேரூராட்சிகள் ஆளுங்கட்சி வசம் உள்ளன. வெள்ளலூர் பேரூராட்சி மட்டும் இழுபறியில் உள்ளது. இங்குள்ள வார்டு கவுன்சிலர்களில் இரண்டு திராவிட கட்சிகளின் கவுன்சிலர்கள் சரி பாதி இருப்பதால் இரண்டு முறை தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், ‘ஏம்பா,  கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 32 பேரூராட்சி என மொத்தமாக அள்ளிவிட்டீங்க. எங்க மானத்தை காப்பாற்ற வெள்ளலூர் பேரூராட்சி ஒன்றையாவது விட்டுக்கொடுங்கப்பா…’ என கெஞ்சுகிறாங்களாம். இது, கோவை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாணவர்களிடம் இருந்து தப்பிக்க வழி தேடும் ஆசிரியர்களை பற்றிச் சொல்லுங்க…’’என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் வெயிலூரில்   ‘‘அரி’’னு முடியற பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவரால்   தாக்கப்பட்டாராம். இது ஒரு பக்கம்னா, ஜெயில் பகுதியில் இருக்கும் பள்ளியில்   மாணவர்களின் போக்கால் ஆசிரியர்கள் வெறுத்து போயி இருக்கிறார்களாம். அதனால   தமிழகம் முழுக்க பள்ளிக்கல்வி திட்டத்தில் ஒழுக்கம் சார்ந்த பாடங்களை   கட்டயமாக்கணும். அதுக்கு அரசு வழி செய்யணும்னு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை   வச்சிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post செல்லத்தை செல்லா காசாக மாற்ற செல்லூரார் எடுத்து இருக்கும் சபதம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Sellurar ,Bullatsamy ,Tamarai ,Uncle ,Peter ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...