×

6வது நாளாக அதிகரிப்பு… பெட்ரோல் விலை ரூ.106ஐ நெருங்கியது; டீசல் ஒரு லிட்டர் ரூ.96க்கு விற்பனை: விலைவாசி உயரும் அபாயம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை  கடந்த 8 நாட்களில் 7வது முறையாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை மட்டுமின்றி விலைவாசி உயரும் அபாயத்தினால் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றும் விலை உயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.94 ஆகவும், டீசல் ரூ.96 ஆகவும் விற்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ெணய் விலை அதிகரித்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை  எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கக்கூடும் என்ற தகவல் வெளியானது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாமல் இருந்தது. குறிப்பாக, 5 மாநில தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வந்தது. தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதாவது 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ என்ற கவலை இல்லத்தரசிகளை ஆட்டி படைக்க தொடங்கியுள்ளது.  இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.சென்னையில் கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4.54, டீசல் விலை ரூ.4.57 அதிகரித்து இருப்பது பொதுமக்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து ரூ.96க்கு விற்பனையாகிறது. அதேபோல, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post 6வது நாளாக அதிகரிப்பு… பெட்ரோல் விலை ரூ.106ஐ நெருங்கியது; டீசல் ஒரு லிட்டர் ரூ.96க்கு விற்பனை: விலைவாசி உயரும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...