×

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி

சென்னை: ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் யோகி பாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்பட பலர் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். டியூட் விக்கி எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் படக்குழு வெளியிட்ட வீடியோவில் காட்டில் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதை காட்சிப்படுத்தப்படுகிறது. கல்வெட்டு ஒன்றும் காட்டப்படுகிறது. பின்பு, சில்லறை நாணயங்கள், ராக்கெட் வடிவிலான 500 ரூபாய் தாள், என பரவிக்கிடக்கும் மண்ணில் படத்தின் பெயர் போடப்படுகிறது. இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

The post நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayantara ,Manambatti ,Chennai ,Yogi Babu ,Devadarshini ,Gouri Kishan ,Narendra Prasad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...