×

துபாயில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றார்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்பு; பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை: துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அபுதாபி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபியில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பாராட்டு விழாவிலும் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 24ம் தேதி துபாய் புறப்பட்டு சென்றார். முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை துபாயில் உள்ள Museum of The Future அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். மேலும், துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அபுதாபி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று காலை அபுதாபியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’ அமைத்து அதற்கு தேவையான நிதி வழங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வருக்கு அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயரதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாயில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.* துபாய், அபுதாபி பயணம் அறிவியல் பார்வையில் புதுமை அளித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துதுபாய், அபுதாபி பயணம் அறிவியல் பார்வையில் புதுமை அளித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது. பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுபடுத்துவதும் கூட அதன் பணி என Museum Of The Future காட்டியது. போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post துபாயில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றார்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்பு; பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Abu Dhabi ,Dubai ,MoUs ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...