×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பரிசலில் சென்று உற்சாகம்

பென்னாகரம் : விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள், பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும் சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் தொங்குபாலம், முதலை பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். ஊட்டமலை பரிசல் துறையில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அதிகரித்த நிலையில், ஒகேனக்கல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வரவால் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்….

The post விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பரிசலில் சென்று உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Ogenacal ,Pennagaram ,Ogenakal ,Darmapuri District ,Okenakal ,Ogenacalle ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு