×

மிருணாள் படம் பாடல் வெளியீடு

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் நானி, தமிழில் ‘வெப்பம்’, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ஆஹா கல்யாணம்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்தார். அவரது சில தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நானி நடிக்கும் 30வது படமான ‘ஹாய் நான்னா’வை சவுர்யவ் இயக்குகிறார். நானி ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பேபி கியாரா கன்னா நடிக்கிறார். வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மோகன் செருகுரி, டாக்டர் விஜயேந்திர ரெட்டி தயாரிக்கின்றனர். ஷானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது. ‘நிழலியே’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதிய பாடலை அனுராக் குல்கர்னியுடன் சின்மயி பாடியுள்ளார்.

The post மிருணாள் படம் பாடல் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Nani ,Mrinal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...