×

படம் இயக்க 18 வருடங்கள் போராடினேன்: மனோஜ் கண்ணீர்

சென்னை: இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘மார்கழி திங்கள்’. இளையராஜா இசை அமைத்துள்ளார். புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்‌ஷணா, நக்‌ஷா சரண் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி, சிவகுமார், சீமான், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, ஜி.தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, பேரரசு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய மனோஜ் கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறியதாவது: படம் இயக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. என் தந்தை பாரதிராஜா, ‘நான் சினிமாவில் நடிக்கவே சென்னைக்கு வந்தேன். அது நிறைவேறவில்லை. இயக்குனராகி விட்டேன். நீயாவது என் ஆசையை நிறைவேற்று’ என்று சொல்லி, என் பாதையை மாற்றி, அவர் இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தில் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தும் எனக்கான இடத்தை அடைய முடியவில்லை. இப்படியே 18 வருடங்களாக கடுமையாகப் போராடி, இப்போதுதான் இயக்குனராகி இருக்கிறேன். இத்தனை வருடங்களாக எனது கஷ்டங்களில் பங்கெடுத்து, சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் எனக்கு உற்சாகமூட்டிய மனைவி மற்றும் எனது மகள்கள், அம்மாவுக்கு நன்றி. (இவ்வாறு அவர் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்,

The post படம் இயக்க 18 வருடங்கள் போராடினேன்: மனோஜ் கண்ணீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Sushindran ,Vanilla Productions ,Bharathiraja ,Manoj ,ilayaraja ,Bharatiraja ,Shiam Selvan ,Rakshana ,Naksha Saran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...