×

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமம் எடுத்தால் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் அலுவலர்களின் செயல்திறன் குறித்தும் ஆய்வு கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் புவியியல் மற்றும்  சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ்,  தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை  இயக்குநர் சுதிப் ஜெயின், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன  மேலாண்மை இயக்குநர் கதிரவன் மற்றும் துறையின் உயர்  அலுவலர்கள், அனைத்து மாவட்ட அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும். மாவட்ட  மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும். சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன்  அப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. கனிம திருட்டினை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டி தர வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்….

The post தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமம் எடுத்தால் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Durai Murugan ,Chennai ,Geology and Mines Department ,Tamil Nadu Mineral Corporation ,Tamil Nadu Magnesite Corporation ,
× RELATED சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர்...