×

காதலன் கண் முன்னே பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தவர்களை பிடிக்க சென்ற போலீசாருக்கு வெட்டு: கமுதி அருகே பரபரப்பு

சாயல்குடி: கமுதி அருகே காதலன் கண்முன் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற 2 போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. தப்பியபோது டூவீலர் கவிழ்ந்து கால் முறிவு ஏற்பட்ட 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், அவரது காதலன் ஹரிகிருஷ்ணனும் கடந்த மார்ச் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் அருகேயுள்ள மூக்கையூர் துறைமுக கடற்கரைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ஹரிகிருஷ்ணனை தாக்கி, இளம்பெண் அணிந்திருந்த தங்க நகையை பறித்துள்ளனர். மேலும் 3 பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. தனது கண் முன்னே காதலிக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஹரிகிருஷ்ணன் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக இளம்பெண், விருதுநகர் எஸ்பியிடம் புகார் அளித்தார். விருதுநகர் போலீசார், ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கமுதி அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மாஸ்வரன் (24), விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார், அஜீத் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களின் செல்போன் எண்களை கொண்டு ஆய்வு செய்ததில் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பத்மாஸ்வரன், தினேஷ்குமார் இருப்பது தெரிந்தது. போலீசார் நேற்று அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் எஸ்ஐ நவநீதகிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு டூவீலரில் தப்பி சென்றனர். சிறிதுதூரத்தில் தப்பி செல்லும்போது டூவீலர் கவிழ்ந்ததில் பத்மாஸ்வரன், தினேஷ்குமாருக்கு கால் உடைந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த போலீசார், மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.காயமடைந்த போலீசாரை ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், எஸ்பி கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தலைமறைவான அஜீத் வேறொரு வழக்கில் திருப்பூரில் கைதாகி இருப்பதாகவும், அவரை அழைத்து வர தனிப்படையினர் சென்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். …

The post காதலன் கண் முன்னே பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தவர்களை பிடிக்க சென்ற போலீசாருக்கு வெட்டு: கமுதி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Sayalkudi ,Kanmun ,
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...