×

நடுரோட்டில் பள்ளி சீருடையில் குத்தாட்டம் போட்ட மாணவி: விழுப்புரத்தில் வைரலாகும் வீடியோ

விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி சீருடையில் அரசுப்பள்ளி மாணவி நடுரோட்டில் குத்தாட்டம்  போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விழுப்புரம் அரசு  மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் காமராஜர் வீதியில்  குத்தாட்டம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில்  இளைஞர்கள் சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும், இருவர் மேளம்  அடிப்பதும், அதற்கு ஏற்றார் போல் சீருடையில் உள்ள மாணவி முதுகில் புத்தக  பையை மாட்டிக்கொண்டு ஐந்து நிமிடம் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இதனை  அவ்வழியாக சென்ற இளைஞர்கள், பொதுமக்கள் பலரும் நின்று வேடிக்கை  பார்த்துவிட்டு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு  பகுதியில் ஓடும் பேருந்தில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்துவது போல்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவி குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது….

The post நடுரோட்டில் பள்ளி சீருடையில் குத்தாட்டம் போட்ட மாணவி: விழுப்புரத்தில் வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Nurot ,Vilupuram ,Viluppuram ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி