×

மார்ச் 28, 29ல் போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்; தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

அவனியாபுரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின்போது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள்  இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது : அரசு பஸ்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதம் வரை கூடுதலாக பெண்கள் பயணம் செய்கின்றனர். வரும் நிதியாண்டில் இதற்காக அரசு ரூ.1,510 கோடியில் இருந்து ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கிராமப்புறங்களில் குறைவாக பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது தவறு.  தமிழகத்தில் முன்பு 14 ஆயிரம் பஸ்கள் ஓடின. தற்போது 18 ஆயிரம் பஸ்கள் ஓடுகின்றன. 4 ஆயிரம் பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. கேட்கும் இடங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பஸ்களில் தினமும் ஒன்றரை கோடி பேர் பயணம் செய்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் முதலமைச்சர் உத்தரவின்பேரில் மக்களுக்காக சிரமம் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வரும் 28, 29ம் தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை திமுக தொழிற்சங்கம்  ஆதரிக்கும் அதே வேளையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ‘‘பஸ் கட்டணம் உயர்த்தப்படாது’’அமைச்சர் ராஜகண்ணப்பன் மேலும் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ்  கட்டணம் உயர்த்தப்படாது’’ என்றார்….

The post மார்ச் 28, 29ல் போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்; தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Labor Strike ,Tamil Nadu ,Minister ,Rajaganappan ,Avaniyapuram ,Rajanganappan ,Traffic Workers Strike ,Buses ,Rajakanappan ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...