×

அக்டோபர் 6ல் ரத்தம் ரிலீஸ்

சென்னை: தமிழ் படம் படத்தின் இயக்குனர் சிஎஸ். அமுதன் இயக்கத்தில் பொலிடிகல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘ரத்தம்’. விஜய் ஆண்டனி உடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரத்தம் திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, டிஎஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குனராகப் பணியாற்றி இருக்கும் ரத்தம் திரைப்படத்தில் திலிப் சுப்ராயன்ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரத்தம் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

The post அக்டோபர் 6ல் ரத்தம் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Amuthan ,Mahima Nambiar ,Nandita Shweta ,Ramya Nambisan ,Rattam ,Vijay Antony ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...