×

ஜவான் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்

ஜவான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்.7ம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ரூ.500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக முன்னறே அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.250 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

The post ஜவான் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Adli ,anirut ,nayantara ,vijay sethupathi ,deepika padugon ,shanjay dutt ,OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித்துக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி?