×

சிவகாசியில் இருந்து 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி பட்டாசு ஏற்றுமதி செய்ய அரசு திட்டம்: அண்ணாமலை தகவல்

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து, விருதுநகரில் பாஜ மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:விருதுநகரில் 22 வயது பெண்ணுக்கு கடந்த 10 மாதமாக நடந்திருக்கும்  குற்றத்தை அவர் ஏன் வெளியே தெரிவிக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும். போலீசார் யாரையும் விடாமல் தயவுதாட்சண்யமின்றி செயல்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து சென்று சுற்றுச்சூழல் அமைச்சரிடம் பேசி உள்ளோம். பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் இல்லை என்றால் பட்டாசு இல்லை. சரவெடியை தடை செய்ய கூடாது. எந்த சரவெடியும் 125 டெசிபலை தாண்டவில்லை. சிவகாசி சரவெடிகள் ஆய்வில் 116 டெசிபலில் தான் உள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சருக்கு சரவெடியை அனுமதிக்க நிர்ப்பந்தம் கொடுத்து வந்துள்ளோம். பட்டாசு தொழிலுக்கு பாஜ 100 சதவீத ஆதரவு அளித்து வருகிறது. சீனா ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி பட்டாசு ஏற்றுமதி செய்கிறது. பின்தங்கிய விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அரசு துணை இருந்து, 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய தொலைநோக்கு திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post சிவகாசியில் இருந்து 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி பட்டாசு ஏற்றுமதி செய்ய அரசு திட்டம்: அண்ணாமலை தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Sivakasi ,Virudhunagar ,Baja Makalirani ,
× RELATED சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை