×

தண்ணீர் தேடி வந்த 2 புள்ளிமான்கள் பலி

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே தொட்டியபட்டி அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் புள்ளிமான் ஒன்று விழுந்து கிடப்பதாக திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி மானின் உடலில் கயிறு கட்டி அதனை மேலே கொண்டு வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த புள்ளிமானை பாதுகாப்பாக திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீரென அந்த மான் பரிதாபமாக இறந்தது.அதேபோல் நேற்று திருவில்லிபுத்தூர் அருகே குன்னூர் பகுதியில் நாய்கள் கடித்து பெண் மான் ஒன்று காயங்களுடன் இருப்பதாக திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி கதிர்காமன் மற்றும் பாரஸ்டர் பாரதிக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் விரைந்து சென்று, காயமடைந்த புள்ளி மானை சிகிச்சைக்காக பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அந்த மானும் திடீரென பரிதாபமாக இறந்தது. நேற்று ஒரே நாளில் தண்ணீர் தேடி வந்த இரண்டு மான்கள் இறந்தது திருவில்லிபுத்தூர் வனத்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் இறந்த 2 மான்களையும் கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்….

The post தண்ணீர் தேடி வந்த 2 புள்ளிமான்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Tiruvilliputhur fire department ,Tiniyapatti ,
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...