பெய்ஜிங்: சீனாவின் வனப்பகுதிக்குள் விபத்திற்குள்ளான போயிங் பயணிகள் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியினை மீட்புக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சுக்கு கடந்த 21-ம் தேதி மதியம் சென்றது. 123 பயணிகள் 9 ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் குவாங்சு மாகாணத்திலுள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.விபத்து ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அதில் பயணித்த 132 பெரும் உயிரிழந்திருக்கக்கூடும் என சீன மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியை மீட்பு படையினர் நேற்று கண்டறிந்தனர்.வாய்ஸ் ரெகார்டர் எனப்படும் தகவல் பரிமாற்றத்தை பதிவு செய்யும் அந்த கருவி பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வந்த கருப்பு பேட்டியின் மற்றொரு பகுதியை சீன மீட்பு படையினர் கண்டறிந்துள்ளனர். 2 கறுப்பு பெட்டிகளும் கண்டறியப்பட்ட நிலையில் 132 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்திற்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது. …
The post சீனாவில் விபத்திற்குள்ளான போயிங் விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு: விமான விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.
