×

விஜய் பட பூஜை எப்போது?

விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் அக்டோபர்19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன ’விஜய் 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘விஜய் 68’ படத்தின் பூஜை அக்டோபர் 1ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அக்டோபர் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அனைத்து பாடல்களையும் வெளிநாட்டு லொகேஷனில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.வெங்கட் பிரபு ஸ்டைலில், விஜய்யின் இரட்டை வேடங்களில், அதிரடி ஆக்ஷன் கதையான இந்த படம் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான விஜய் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

The post விஜய் பட பூஜை எப்போது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : vijay ,Vijay 68 ,Venkat Prabhu ,Yuvan Shankar Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விரைவில் நாம் சந்திப்போம்.! 12ம்...