×

பைக் சாகசத்தில் ஈடுபட்ட எஸ்ஐ மகன் உள்பட 18 வாலிபர்கள் கைது: விலை உயர்ந்த 21 பைக்குகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு இடையூராக பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னை முழுவதும் நடத்திய அதிரடி நடவடிக்கையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அபாயகரமான முறையில் பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட முகேஷ்(20), ரோமன் அல்கிரேட்(23), ஹரிகரன்(21), முகமது சாதிக்(20), முகமது ரகமத்துல்லா(20), முகமது ஆசிப்(19) ஆகிய 6 பேர் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.இதேபோல், 20ம் தேதி ஸ்டான்லி ரவுண்டானா முதல் மூலக்கொத்தளம் சிக்னல் வரை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய அஜித்குமார்(21), கொருக்குபேட்டை பிரவீன்குமார்(23), சதாம் உசேன்(22), 16 வயது சிறுவன் ஆகியோரை வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் கைது செய்து விலை உயர்ந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடந்த 21ம் தேதி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட புது வண்ணாரப்பேட்டை பாலாஜி(20), தண்டையார்பேட்டை ஹரீஸ்குமார்(22), மோவின்(20), திருவொற்றியூர் சல்மான்(19), சென்னையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தனசேகரின் மகனும், தனியார் கல்லூரி மாணவனுமான  டிவின்குமார்(20) ஆகிய 5 பேரை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் கைது செய்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.மேலும், ராயப்பேட்டை ஆர்.கே.சாலை, டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கோயம்பேடு கிருஷ்ணன்(19), விக்னேஷ்(19), சந்தோஷ்(19), நெற்குன்றம் கோபி(21), ஆல்வின்(21), விருகம்பாக்கம் தமிழரசன்(19) ஆகிய 7 பேரை ராயப்பேட்டை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாதவரம் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மோசஸ்(எ)மொய்தீக்(19), கிஷோர்குமார்(19),பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சித்தார்த்(19), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா(23) ஆகிய 4 பேரை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 18 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்….

The post பைக் சாகசத்தில் ஈடுபட்ட எஸ்ஐ மகன் உள்பட 18 வாலிபர்கள் கைது: விலை உயர்ந்த 21 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...