×

நடிகை கவுதமியின் 6 வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : நடிகை கவுதமி மூல தன ஆதாய வரியில் 25%-தை செலுத்தும் பட்சத்தில் அவரது 6 வங்கி கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கவுதமி தாக்கல் செய்து இருந்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு ரூ. 4.10 கோடிக்கு விற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம் அந்த விவசாய நிலத்தின் வருவாய் ரூ.11.17 கோடி என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், தனது 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25% செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கும் படி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளார். மேலும் 4 வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்த நீதிபதி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார். …

The post நடிகை கவுதமியின் 6 வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Kautami ,Chennai High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...