- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- Thiruvadan
- சட்டமன்ற உறுப்பினர்
- ராம கருமாணிக்கம்
- காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
பேரவையில்பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திருவாடனை எம்.எல்.ஏ ராம.கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசியதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதுமாக இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுதல் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டபோது அவர்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பல்வேறு கடிதங்கள் வாயிலாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. முதல்வர் 28.2.2022 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 72 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பினர். மேலும், சிறையில் உள்ள மீனவர்களையும் மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது….
The post அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் 72 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் appeared first on Dinakaran.
