×

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

டெல்லி: கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைவதும், பிறகு 2வது, 3வது அலைகள் வருவதுமாக இருந்தது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அடுத்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது மற்றுமின்றி, இறப்புகளும் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில்; நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31-க்குள் முடித்துக் கொள்ளலாம். பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம். கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 2020 மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. …

The post நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,State ,Delhi ,Union Government ,State Governments ,Corona ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை