×

பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம்-கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்டு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள், அலுவலக பணி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சங்கராபுரம், திருக்கோவிலூருக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துகளை நம்பி உள்ளனர்.  ஆனால்,  போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ- மாணவிகள் மிகுந்த  சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில்மாணவ, மாணவிகள் போதிய பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.சங்கராபுரம்-திருக்கோவிலூர் வழித்தடத்தில் குறைந்த  எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், எப்போதாவது வரும்  தனியார் பேருந்துகளில், முண்டியடித்துக் கொண்டு ஏறி, அதன் படிக்கட்டில்  தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையிலும், பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். எனவே இந்த  வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரையில் அரசு  போக்குவரத்து கழகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த வழித்தடத்தில் அரசு  பேருந்துகளை கூடுதலாக இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்….

The post பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம்-கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Bagandai Joint Road ,
× RELATED வடமாமந்தூர் – இளையனார்குப்பம் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்து