×

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: தொழிலாளி சிக்கினார்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் அப்து (49). தொழிலாளி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியின் ஏழ்மை நிலையை பயன்படுத்தியும், ஆசை வார்த்தை கூறியும் அவரது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று பழகி வந்தார். இதில், சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்று பரிசோதனை செய்தார். இதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், அப்துதான் காரணம் என தெரிந்தது. உடனே தேவாலா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துவை நேற்று கைது செய்தனர்….

The post 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: தொழிலாளி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை