×

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

ஹாமில்டன்: ஐசிசி மகிளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், தொடர்ச்சியாக 4 லீக் ஆட்டங்களில் தோற்றிருந்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஹாமில்டனில்  நேற்று  நடந்த இப்போட்டி, மழை காரணமாக சுமார் 5 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை டோட்டின் 27, கேப்டன் ஸ்டெபானி 18, அபி 12* ரன் எடுத்தனர். கடைசி 3 ஓவரில் 26 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ், முதல் 17 ஓவரில் 69 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. பாக் தரப்பில்  நிதா தர் 4 ஓவர் வீசி 10 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து முதல்  வெற்றியை பெற்றது. அந்த அணியின் முனீபா அலி 37, சிட்ரா அமீன் 8 ரன்னில் வெளியேற, கேப்டன் பிஸ்மா 20*, ஒமைமா 22* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறந்த வீராங்கனையாக நிதா தர் தேர்வு செய்யப்பட்டார்.* 2009க்கு பிறகுநடப்பு தொடரில் 5 லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான், 2009க்கு பிறகு உலக கோப்பை ஆட்டத்தில் முதல் முறையாக வெற்றியை ருசித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அந்த வாய்ப்பு கை கூடும்….

The post மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Women's Cricket World Cup ,Hamilton ,ICC World Cup ODI ,Women's World Cup Cricket ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...