×

அப்துல்கலாம் பெயரை கூறி இரிடியம் தருவதாக ரூ.1.75 கோடி மோசடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் புகார்

சென்னை: அப்துல்கலாம் பெயரை கூறி இரிடியம் தருவதாக ₹1.75 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல நடிகர் விக்னேஷ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கிழக்கு சீமையிலே, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் நான் வசித்து வரும் குடியிருப்பின் கீழ் தளத்தில் ராம்பிரபு என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் அவரது உதவியாளர் பொன்ராஜ் ஆகியோருடன் நெருங்கி பழகி வருவதாகவும், அதற்கான புகைப்படங்களை அவர் காண்பித்தார். அப்போது தான் இரிடியம் விற்பனை செய்து வருவதாகவும், அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தால் பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றார். அதற்காக அவர் பல்வேறு புகைப்படங்களை காண்பித்தார்.மேலும், தனது பெயரில் ரிசர்வ் வங்கியில் ₹10 ஆயிரம் கோடி இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில், தன்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அழைத்து சென்று, அங்கு பலரை அறிமுகம் செய்து வைத்தார். சைரன் வைத்த காரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தான்  ராம்பிரபு சுற்றி வந்தார். தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், சர்வதேச சந்தையில் இதற்கு நல்ல விலை என்று ஆசை வார்த்தை கூறினார். பிறகு தனக்கு இரிடியம் கொடுப்பதாக கூறி ₹1.75 கோடி பணம் பெற்றார். ஆனால், சொன்னபடி அவர் இரிடியம் கொடுக்கவில்லை.கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டி வருகிறார்.இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளேன். இதற்கிடையே விருதுநகர் போலீசார் மோசடி வழக்கில் ராம்பிரபுவை  கைது செய்துள்ளனர். எனவே, இரிடியம் கொடுப்பதாக கூறி ₹1.75 கோடி மோசடி செய்த  ராம்பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….

The post அப்துல்கலாம் பெயரை கூறி இரிடியம் தருவதாக ரூ.1.75 கோடி மோசடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் புகார் appeared first on Dinakaran.

Tags : Vignesh ,Abdulkalam ,Chennai ,Police Commissar's Office ,
× RELATED தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்...