×

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது.. 2வது நாளாக ஓ பன்னீர் செல்வம் வாக்குமூலம்!!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக 2வது நாளாக இன்று ஆஜரானார். அப்போது ஓ பன்னீர் செல்வம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, ‘இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி வேட்பாளரை தேர்வு செய்ததும் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சிலமுறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா கூறினார்.சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் எங்கும் பேசவில்லை,’ என்றார். இதனிடையே நேற்று ஆஜரான ஓ பன்னீர் செல்வத்திடம் நீதிபதி 78 கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, தெரியாது, தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.கடந்த 2016  செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்  என்ற விவரமும் எனக்கு தெரியாது.சசிகலாவின்  அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க  மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில்,  அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும்  எனக்கு தெரியாது என்றார். இதையடுத்து, விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்….

The post ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது.. 2வது நாளாக ஓ பன்னீர் செல்வம் வாக்குமூலம்!! appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Chennai ,Former Deputy Chief of the Commission ,Arumukasamy ,Jayalalithah ,
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி