×

செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த தாமரைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டகம் கிராமத்தில் குளம் உள்ளது. இங்குள்ள குளத்தை அப்பகுதி மக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குளத்தில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்க்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்பட்டது.இவ்வாறு பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரைகள் புதர்போல் மண்டி கிடப்பதால், மழைக்காலங்களில் அந்த பகுதியில் தேங்கும் மழைநீர் குளத்தில் வடிவதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் குளத்தின் படித்துறையும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. புதர் மண்டி கிடப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரிப்பதால், குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு விடப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்….

The post செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த தாமரைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sembanarcoil ,Sembanargoil ,Mayiladuthurai District ,Sempanarcoil ,
× RELATED திருக்கடையூரில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்