×

சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் கள்ளிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டையன்வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளியில் 28 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டஇப்பள்ளியின்  மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து சுவரின் பூச்சு உடைந்து விழுந்து வருகிறது. மேலும் பக்கவாட்டு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகள் வரை இப்பள்ளியில் 7 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் தலைமை ஆசிரியரின் முயற்சியால் தற்போது 28 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயில பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தற்போது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.    …

The post சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Mottaiyanvyal ,Kalliwayal panchayat ,Kannangudi ,panchayat ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் கன மழை