×

கோடை வெப்பம் தணியவேண்டி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி குமணன்சாவடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கவும், மழை பெய்ய வேண்டியும் அம்மனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,   அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகளும் நடைபெற்றன.இதையொட்டி, பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் 1008 இளநீருடன் குமணன்சாவடி  ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோயில் தர்மகர்த்தா முன்னாள் நகர்மன்ற தலைவர் பூவை ஞானம், நிர்மலா ஞானம் மற்றும் கோயில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்….

The post கோடை வெப்பம் தணியவேண்டி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Oothukattu Hahanayamman ,Poontamalli ,annual ,Kumbabhishek ceremony ,Uthukkadu Pahanayamman ,Poontamalli Kumananchavadi ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ