×

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான், நயன்தாரா

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதிக்கு சென்றனர்.

குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டனர். வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான், நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayantara ,Shaharikan ,Sami ,Tirupati Temple ,Shah Rukkan ,Deepika Padukone ,Vijay Sethupathi ,Yogi Babu ,Priyamani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில்...