×

29 கி.மீ தூரத்தை, 13.05 மணி நேரத்தில் நீந்திச் சென்று அசத்திய சிறுமி: டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து

சென்னை: இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி இடையிலான 29 கி.மீ. தூரத்தை 13.05 மணி நேரத்தில் நீந்திச் சென்று ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் அசத்தினார். மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரியும் மதன்ராய் என்பவரின் மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது13). சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்புக்குள்ளானவர். மேலும் இச்சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி இடையிலான 29 கி.மீ. தூரத்தை 13.05 மணி நேரத்தில் நீந்திச் சென்று ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் அசத்தினார். இதற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஜியாராய் ஒரு எடுத்துக்காட்டு, கடலில் உளன்ள பல சவால்களை கடந்து சிறுமி சாதனை படைத்துள்ளதாக சைலேந்திர பாபு பாராட்டினார். 2021-ம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்த இவரை பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. …

The post 29 கி.மீ தூரத்தை, 13.05 மணி நேரத்தில் நீந்திச் சென்று அசத்திய சிறுமி: டிஜிபி சைலேந்திர பாபு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DGP ,Shailendra Babu ,Chennai ,Dhanushkodi ,Thalaimannar ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...