×

திருப்பதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தும்புரூ தீர்த்தத்தில் புனித நீராடல்: கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுக்கு பின் அனுமதி

திருமலை: திருப்பதி சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தும்புரூ தீர்த்தத்தில் 12 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலையில் அடர்ந்த சேஷாசல வனப்பகுதியில் தும்புரூ தீர்த்தமுக்கொடிக்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பவுர்ணமியன்று தும்புரூ தீர்த்த பாதயாத்திரை நடைபெறும். இதில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமியான கடந்த 17ம் தேதி மீண்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும், 18ம் தேதி (நேற்று முன்தினம்) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் தும்புரூ தீர்த்தம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதில், மொத்தம் 12 ஆயிரத்து 300 பக்தர்கள் சென்று புனித நீராடினர். பக்தர்களின் வசதிக்காக  பாபவிநாசம் அணையில் வாரி சேவகர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. அணை அருகே முதலுதவி மையம், 2 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஏராளமான பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.  அன்னபிரசாதம் பெறும் வகையில் பாபவிநாசத்தில் இருந்து செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களும், பக்தர்கள் சிரமமின்றி செல்ல வழிநெடுகிலும் ஏணிகள், தடுப்புகள், இரும்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டது. சுகாதார துறை மூலம் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.  போலீசார், வனத்துறையினர், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஒருங்கிணைந்து பாபவிநாசம் முதல் தும்புரூ தீர்த்தம் வரை  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.தும்புரூ தீர்த்தம் என்றால் என்ன?: திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் தும்புரூ முனிவர் என்பவர் கடும் தவம் புரிந்து வந்தார். இந்த தவத்தை கண்டு பெருமாளே நேரில் வந்து அவருக்கு முக்தி அளித்தார். இதைத்தொடர்ந்து, அந்த இடத்திற்கு தும்புரூ தீர்த்தம் என்ற பெயர் வந்தது. மேலும், அங்கு வந்தால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டு அமைந்து நிலவும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்….

The post திருப்பதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தும்புரூ தீர்த்தத்தில் புனித நீராடல்: கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுக்கு பின் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tumpuru Tirupati Dense Forest ,Tirumalai ,Tumpuru ,Tirupati Cheshasalam ,Tirupati ,
× RELATED கட்சி தலைவர்களின் கைக்கூலியாக...