×

கோயில் புனரமைப்பு மதிப்பீட்டை பரிசீலிக்கும் மாநில அளவிலான வல்லுநர் குழு மாற்றியமைப்பு

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்காக மதிப்பீட்டினை பரிசீலித்து உரிய பரிந்துரை மற்றும் ஒப்புதல் அளிக்க மாநில அளவிலான வல்லுநர் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் முத்துச்சாமி, கட்டமைப்பு வல்லுனராகவும், இந்திய தொல்லியல் துறை தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, ஓய்வு பெற்ற மாநில தொல்லியல் துணை கண்காணிப்பாளர் வசந்தி, ஓய்வு பெற்ற தமிழ அரசின் தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர் தொல்லியல் துறை வல்லுனராகவும், ஓய்வு பெற்ற தொல்லியல் கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி தொல்லியல் வடிவமைப்பாளராகவும், மாமல்லபுரம் அரசின் கட்டிட மற்றும் சிற்ப கலை கல்லூரியில் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த பாரம்பரிய ஸ்தபதி தட்சிணா மூர்த்தி, மாநில தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் சிவானந்தம், ஆகம வல்லுநர்கள் சைவம்- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் சந்திரசேகர பட்டர், வைணவம்- மாமல்லபுரம் அனந்த சயன பட்டாச்சாரியார், திருக்குறுங்குடி கோவிந்தராஜ பட்டர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திருப்பணி), இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் பகுதிகளாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கி புதிய உறுப்பினர்களை நியமித்திடவும், குழுவின் பதவிக்காலத்தை நிர்ணயிக்கவும், நீட்டிப்பு செய்யப்படுகிறது….

The post கோயில் புனரமைப்பு மதிப்பீட்டை பரிசீலிக்கும் மாநில அளவிலான வல்லுநர் குழு மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Tags : State Level Expert ,Chennai ,Hindu Religious Endowment ,Commissioner ,Kumaragurubaran ,Tamil Nadu ,
× RELATED சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்...