×

பிஎன்பி பாரிபா ஓபன் பைனலில் ஸ்வியாடெக்-சாக்கரி பலப்பரீட்சை

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் – மரியா சாக்கரி (கிரீஸ்) இன்று மோதுகின்றனர். அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பவுலா படோசாவுடன் (ஸ்பெயின்) மோதிய சாக்கரி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த படோசா 6-4 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி படோசாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த சாக்கரி 6-2, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக டபுள்யுடிஏ 1000 அந்தஸ்து தொடரின் பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது.மற்றொரு அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் (4வது ரேங்க், 20 வயது) 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை (26வது ரேங்க், 30 வயது) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 49 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சமீபத்திய போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வரும் ஸ்வியாடெக், இறுதிப் போட்டியில் இன்று சாக்கரியின் சவாலை சந்திக்கிறார்….

The post பிஎன்பி பாரிபா ஓபன் பைனலில் ஸ்வியாடெக்-சாக்கரி பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Sviatek-Zachary ,BNP Paribas Open ,Indian Wells ,US ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்