×

என் ரசிகையை காதலித்த விஜய் சேதுபதி: சென்னை விழாவில் ஷாருக்கான் கலகலப்பு

சென்னை: அட்லி இயக்கியுள்ள பான் இந்தியா படம் ‘ஜவான்’. இதனை ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் ஷாருக்கான் தயாரித்து, நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஷாருக்கான் பேசியதாவது: நான் என் வாழ்வில் ஒரு படத்துக்கான நிகழ்ச்சியை தமிழ் நாட்டில் நடத்தியதில்லை. தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன. ‘ஹே ராம்’ படத்தில் நான் தமிழில் பேசியிருந்தேன்.

தமிழ்நாட்டில் எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், மணிரத்னம் என சில நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது அட்லி, விஜய்சேதுபதி, யோகிபாபு என புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அனிருத் என் மகனை போன்றவர். அவரை ‘கொல வெறிடி’ பாடலில் இருந்தே நான் அறிவேன். அவர் ஒரு இந்தி பாடலுக்கும், ஒரு தமிழ் பாடலுக்கும் இசை அமைக்கத்தான் வந்தார். நான்தான் முழு படத்துக்கும் இசை அமைக்கச் சொன்னேன். அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். பல நாட்கள் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது இவர்கள் அளித்த உபசரிப்பில் எனது சிக்ஸ்பேக்கை இழந்து விட்டேன்.

இங்குள்ள கலைஞர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். விஜய்சேதுபதி அற்புதமான நடிகர், இப்போது நண்பராகவும் ஆகிவிட்டார். நிறைய பாலிவுட் படங்களில் நடிக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். எனக்கு நடனம் அவ்வளவாக வராது, விஜய் மாதிரியோ, ஏன் அட்லி மாதிரிகூட எனக்கு ஆடத் தெரியாது. ஆனால் ஷோபி மாஸ்டர் என்னையும் ஆட வைத்தார். பல நாட்கள் கால் வலியால் அவதிப்பட்டேன். தமிழ் கலைஞர்கள் எனது மனசுக்கு நெருக்கமானவர்கள். அவர்களுக்கு நான் புதிய பட்டங்கள் தரப்போகிறேன்.

மரணமாஸ் அட்லி, வித்தைக்காரன் அனிருத், வசீகரமான நயன்தாரா, அட்டகாசமான விஜய் சேதுபதி, கம்பீரமான முத்துராஜா, ஃபயரான அனல் அரசு. இங்கு பேசிய விஜய் சேதுபதி, எனது ரசிகையை காதலித்ததாகவும், அவரோ என்னை காதலிப்பதாக சொன்னதாகவும் இந்த படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் என்னை பழிவாங்கிவிட்டதாகவும் சொன்னார். என்னை அவர் பழிவாங்கலாம். ஆனால், எனது ரசிகையை விட்டுத்தர மாட்டேன். இவ்வாறு ஷாருக்கான் பேசினார்.

The post என் ரசிகையை காதலித்த விஜய் சேதுபதி: சென்னை விழாவில் ஷாருக்கான் கலகலப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Shah Rukh Khan ,Chennai ,India ,Atlee ,Red ,Chillies ,Nayanthara ,Deepika Padukone ,Yogi Babu ,Anirudh ,Kollywood News ,Kollywood ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்...