×

களக்காட்டூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: களக்காட்டூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆர்த்தி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவ நெல் சாகுபடி அறுவடை நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கலெக்டர் ஆர்த்தி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை, கலெக்டர் ஆர்த்தி, நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பினை அடிப்படையாக கொண்டு 78 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி, இணையவழி பதிவு செய்து தேவையான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து பயனடையலாம் என்றார். இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜெ.சத்தியவதி தேவி, உதவி மேலாளர் ஹரிகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post களக்காட்டூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Government Direct Rice Purchase Station ,Kalkatur village ,KANCHIPURAM ,DIRECT RICE ,KALAKATUR VILLAGE ,Kanchipuram District ,Dinakaraan ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...