×

பூந்தமல்லி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 1008 பால்குடம் அபிஷேகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி சீரடி சாய்நகர் பகுதியில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும். அதன்படி நேற்று சிறப்பு பாலாபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக பூந்தமல்லி பனையாத்தம்மன் கோயிலில் இருந்து 1008 பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா மற்றும் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, கவுன்சிலர் கவிதா சுரேஷ், ருத்ரவேல், எல்.என்டி.நாகராஜ், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். …

The post பூந்தமல்லி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 1008 பால்குடம் அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : 1008 Balkudam Abhishekam ,Poontamalli ,Subramaniaswamy Temple ,Valli Devasena Udanurai ,Swamy Temple ,Poontamalli Seerdi Sainagar ,1008 Palkudam Abhishekam ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து