×

4 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அலுவல் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர்  அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:19.3.2022 அன்று தமிழத்தின் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் அனைவருமே விவாதத்தில் கலந்துகொண்டு விவாதம் செய்து எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் அன்றுடன் பேசி முடிப்பார்கள். 24ம் தேதி நிதியமைச்சர், வேளாண்மை துறை அமைச்சரும் பதிலுரை தருவார்கள். தொடர்ந்து துணை நிதிநிலை அறிக்கை முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 24ம் தேதியுடன் இந்த நிதிநிலை அறிக்கை மீது நடைபெறும் விவாதம் முடிவு பெறும்.  திங்கட்கிழமை (21ம் தேதி) சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து, 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் தொடங்கப்படும். செவ்வாய்க்கிழமை (22ம் தேதி) 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் இரண்டாம் நாளாக நடைபெறும். தொடர்ந்து, புதன்கிழமை (23ம் தேதி) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மூன்றாம் நாளாக நடைபெறும்.கடைசி நாளான வியாழக்கிழமை (24ம் தேதி) 2022-23ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவை முன் வைக்கப்படும். 2021-22ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். துணை மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி) நடைபெறும். இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு- அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும் நிறைவேற்றப்படும். முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி), 2022-23ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு-அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் (விவாதமின்றி), 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும். பின்னர், அரசினர் சட்டமுன்வடிவுகள்- ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடக்கிறதுமானியக்கோரிக்கையை எந்தெந்த நாட்களில் நடத்துவது என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். கேள்வி-பதில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடக்கிறது. எதிர்கட்சிக்கு எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் அதை கொடுக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்….

The post 4 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Papadu ,Chennai ,Finance Minister ,P. TD ,R.R. paranivel thyagarajan ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...