×

மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா

சென்னை: வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பிரபு ராம் வியாஸ் இயக்கும் இதில், மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மற்றும் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் நடிக்கின்றனர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘குட் நைட்’ படத்தை தயாரித்த எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் நஸ்ரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்தக்கட்ட ஷூட்டிங் கோவா அருகிலுள்ள கோகர்ணா என்ற பகுதியில் நடக்கிறது.

The post மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Srikauri Priya ,Manikandan ,CHENNAI ,Prabhu Ram Vyas ,Khanna Ravi ,Saravanan ,Geetha Kailasam ,Shreyas… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பேர் கைது