×

வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை அமைக்க தலைமை முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வன விலங்குகள் வேட்டை, வனக் குற்றங்கள் தடுப்பு ஆகியவை தொடர்பான  வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை மற்றும் ரயில்வே தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அறிக்கைகளை பார்த்த நீதிபதிகள், தடுப்புச்சுவர் கட்டுமானம் அகற்றப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், கண்காணிப்பு கோபுரம், சூரிய ஒளி வேலிகள், சுரங்கவழி பாதை ஆகியவை குறித்து முழுமையான தகவலும் இல்லை. பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்டனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜை தலைவராகவும், காவல்துறை ஐ.ஜி. முருகன், வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், உதவி தலைமை முதன்மை வனப்பாதுகாவலரை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதை தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு நீதிபதிகள்  தள்ளிவைத்தனர். இதற்கிடையில் கொடைக்கானல், ஆனைமலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நீரஜ் குமார் சேகர் ஆஜராகி, காட்டுத்தீ 24 மணி நேரத்தில் அணைக்கப்பட்டு விட்டது. மனிதர்களோ, வனவிலங்குகளோ பலியாகவில்லை என்று விளக்கம் அளித்தார்….

The post வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை அமைக்க தலைமை முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Principal Conservator ,Forests ,Forest Crimes Prevention Unit ,Tamil Nadu Govt ,High Court ,Chennai ,Chief Principal Conservator of Forests ,
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை