×

திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி: 1ம் தேதி முதல் தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனையொட்டி ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதனை www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். இதில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை மற்றும் நிஜபாதம் தரிசன டிக்கெட்டுகள் மின்னணு குலுக்கல் மூலம் ஆன்லைனில் பக்தர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த சேவைகளுக்கான குலுக்கல் முன்பதிவு செய்ய, மார்ச் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 22-ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் (குலுக்கல்) முறையில் தேர்தெடுக்கப்பட்டு 22-ம் தேதி காலை 10 மணிக்குப் பிறகு டிக்கெட் பெறுபவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்களுக்கு குறுச்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 2 நாட்களுக்குள் பக்தர்கள் அந்த சேவைகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்காரப் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக டிக்கெட் பெறலாம்….

The post திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி: 1ம் தேதி முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumalai ,Arjitha ,Tirupati Ethumalayan Temple ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...