×

திருவண்ணாமலையில் 2 ஆண்டுக்குப்பின் மீண்டும் விழாக்கோலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு விதிக்கப்பட்ட தடையை 2 ஆண்டுக்கு பிறகு நீக்கி, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று பகல் 1.40 மணிக்கு தொடங்கி, இன்று பகல் 1.20 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. வெயில் அளவு 99.6 டிகிரி பதிவானது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. மாலையில் இருந்து பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். கிரிவலப்பாதையின் 14 கி.மீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு கற்பூர தீபம் ஏற்றிவிட்டு, கிரிவலம் சென்றனர். விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. இதனால் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது. அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் குவிந்ததால், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது….

The post திருவண்ணாமலையில் 2 ஆண்டுக்குப்பின் மீண்டும் விழாக்கோலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Pournami Krivalam ,Tiruvannamalaya ,Tiruvannamalai ,Collector ,Murukesh ,Pournami Krivalat ,Thiruvannamalai ,Bankuni ,Thiruvannamalaya ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...